டிரெண்டிங்

அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் - பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பதவி

அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் - பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பதவி

rajakannan

அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதன்படி அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சிவி சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ராஜ கண்ணப்பன், எஸ்.பி சண்முகநாதன், கோகுல இந்திரா, வி.சோமசுந்தரம், முக்கூர் சுப்பிரமணியன், புத்தி சந்திரன் ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் மற்றும் ஆதி ராஜாராம், முருகுமாறன் ஆகியோரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் சிவபதியும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி சையதுகான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக அதிமுக மக்களவை குழு துணைத் தலைவர் குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளராக வானூர் எம்எல்ஏ சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்ஜிஆர் மன்றம், மீனவர் பிரிவு, மகளிர் அணி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.