டிரெண்டிங்

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்தன

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்தன

webteam

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்தன.

இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக இன்று மதியம் 12:00 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதேபோல் இரு அணிகளும் இணைந்ததற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனால் சசிகலா நீக்கம் பற்றி உறுதியான முடிவு எடுக்க எடப்பாடி அணி தயங்குவதாகக் கூறி ஓபிஎஸ் அணியினர் தலைமைக் கழகம் வருவதில் தயக்கம் காட்டினர். ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழகம் வரும் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் அணிகள் இணைந்ததை அறிவித்தனர்.