டிரெண்டிங்

குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!

குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!

kaleelrahman

காணொளியில் அறிக்கை விடுவது பெரிய காரியமல்ல, களத்தில் நின்று செயலாற்றுவதுதான் முக்கியம். எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என எண்ணுகிறார்கள். இந்த வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள் என மதுரையில் அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்தார். 


மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு மணிநேர மழை தள்ளாடுகிறது தமிழகத்தின் தலைநகர் என்ற நடிகர் கமலஹாசனின் கருத்துக்கு பதிலளித்த அவர்,
வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறது, கடந்த காலத்தை ஒப்பிடுகையில் நீர்நிலைகள் சிறப்பாக சிரமைக்கபட்டுள்ளன. காணொளி காட்சி மூலம் அறிக்கை வெளியிடுவதை, விட களத்தில் வந்து பார்க்கவேண்டும், அரசை குறைகூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார்கள். கடந்த காலங்களை காட்டிலும் தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டுள்ளன.


எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என எண்ணுகிறார்கள். இந்த வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள். குறை சொல்லுபவர்களின் தகுதியை எண்ணங்களை நிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது எந்த வகையிலாவது குறை சொல்ல வேண்டும் என குறை கூறுகின்றனர்.


அரசுப்பள்ளி மாணவர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பதற்கு முன்பாக பெறாத பிள்ளைக்கு பெயர் வைக்க அவர்கள் ஆடுகிற ஆட்டம் தான் இந்த போராட்டம் எல்லாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில்வரும் என காத்திருக்கிறோம். ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது.

நடிகர் விஜய் இயக்கம் சார்ந்த  மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க உரிமையுள்ளது. அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல. நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதில் அதைத்தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.திமுக அவலங்கள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளது என பேசினார்.