டிரெண்டிங்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழுபேர் மட்டும்தான் தமிழர்களா ? கே.எஸ்.அழகிரி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழுபேர் மட்டும்தான் தமிழர்களா ? கே.எஸ்.அழகிரி

kaleelrahman

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் மட்டும்தான் தமிழர்களா? தமிழக சிறையில் உள்ள மற்ற கைதிகள் யாரும் தமிழர்கள் இல்லையா? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ், அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.


பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது " உலகில் இரண்டாவது பெரிய ரயில்வே துறையான இந்திய ரயில்வே லாபகரமாக நடந்து கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வரும் ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் வண்ணமயமான ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். கட்டணம் என்பது 25 முதல் 30 விழுக்காடு அதிகரிக்கும்"

"அதேபோல புதிய கல்விக் கொள்கை சமதர்மத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது. 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இடை நில்லா கல்வியை கொண்டு வந்ததால் கிராமப்புற பெண்கள் பதினொன்றாம் வகுப்பு வரை படித்து பயன் பெற்றனர். எனவே புதிய கல்விக் கொள்கை உயர் நிலையில் உள்ளவர்களுக்கும், உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்படுமே தவிர, நடுத்தர மக்களுக்கு இந்த புதிய கல்விக் கொள்கை பயன்படாது என்றவரிடம்.


தொடர்ந்து 7 தமிழர் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் மட்டும் தான் தமிழர்களா, தமிழக சிறையில் உள்ள மற்ற கைதிகள் யாரும் தமிழர்கள் இல்லையா அப்படியானால் தமிழகத்தில் ஒவ்வொரு சிறையில் உள்ள 1500 கைதிகளும் தமிழர்கள் தான், அவர்களையும் விடுதலை செய்யலாம்.


கொலை செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தமிழன் என்று பெயர் வைத்ததும் என்ன நியாயம் என்றும் கேட்ட அவர், ராஜீவ் கொலை வழக்கில் நீதி தனது கடமை நிலைநாட்டும் என்று நம்பிக்கை இருக்கிறது, ராஜீவ் கொலை குற்றவாளிகள் குற்றமற்றவர் என்று கூறி நீதிமன்றமே விடுதலை செய்தால் நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்தார், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கூறுபவர்கள், குற்றவாளிகளுக்கு துப்பாக்கி, குண்டு, வெடிமருந்து வாங்கிக் கொடுத்தார்களா என சர்ச்சையாக கேள்வி எழுப்பினார்.