டிரெண்டிங்

ஒலிம்பிக் நீச்சல்: 5 பிரிவுகளில் அசத்த காத்திருக்கும் ஹங்கேரி வீராங்கனை கடிங்கா ஹோஸ்சு

kaleelrahman

அனுபவ வீராங்கனை கடிங்கா ஹோஸ்சுவின் பங்களிப்பை ஒலிம்பிக்கில் ஹங்கேரி ஒலிம்பிக் குழு பெரிதும் நம்பியிருக்கிறது.

சர்வதேச நீச்சல் போட்டிகளில் நடத்தப்படும் பட்டர்ஃபிளை, பேக் ஸ்ட்ரோக், ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்டைல் ஆகிய நான்கு பிரிவுகளிலும் கைதேர்ந்தவர் கடிங்கா ஹோஸ்சு. 32 வயதாகும் அனுபவ நீச்சல் நாயகியான இவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பட்டர் ஃபிளை, 200 மற்றும் 400 மீட்டர் மெட்லி, 4பேர் அடங்கிய மகளிர் 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே ஆகிய 5 பிரிவுகளில் பங்கேற்கிறார். இதில் மெட்லி என்பது பட்டர் ஃபிளை, பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், ஃப்ரீ ஸ்டைல் ஆகிய நான்கு பிரிவுகளையும் உள்ளடக்கிய பந்தயமாகும்.

ஒலிம்பிக்கிற்கு முன்னோட்டமாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமது தனித்திறமையை பறைசாற்றியிருக்கிறார் ஹோஸ்சு. முந்தைய ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பதக்க வேட்டை நடத்தியிருக்கிறார் ஹோஸ்சு. 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் மெட்லி, 400 மீட்டர் மெட்லி ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை வென்ற கடிங்கா, 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 26 தங்கப்பதக்கங்கள், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் 36 தங்கப் பதக்கங்கள் என ஹோஸ்சுவின் சாதனை பட்டியல் நீளமானது. மேலும், 100, 200, 400 மீட்டர் மெட்லி ஆகிய பிரிவுகளிலும், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவிலும் உலக சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தமது சாதனை நீச்சலை தொடரும் பேராவலில் இருக்கிறார் கடிங்கா ஹோஸ்சு.