உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரபல கட்சிகள் பெற்ற வாக்குகளைவிட நோட்டாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், 255 தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரபல கட்சிகள் பெற்ற வாக்குகளைவிட நோட்டாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைய புள்ளிவிவரப்படி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான நோட்டாவிற்கு 0.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஆம் ஆத்மி கட்சிக்கு 0.35 சதவிகிதம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 0.11 சதவிகிதம், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 0.47 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
இதனைப்போலவே, உத்தரப்பிரதேசத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.07 சதவிகிதம், தேசியவாத காங்கிரஸ் 0.05 சதவிகிதம், சிவசேனா 0.03 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று நோட்டா வாக்குகளை விட மிகவும் பின்தங்கியுள்ளது.