டிரெண்டிங்

“டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி” - ராகுல் நம்பிக்கை பேச்சு

“டெல்லியில் 7 தொகுதிகளிலும் வெற்றி” - ராகுல் நம்பிக்கை பேச்சு

webteam

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியிலுள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் முன்னேற்பாடுகளை செய்துவருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்திவருகின்றனர். 

அந்தவகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் பேசியுள்ளார். அதில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமே இல்லை. டெல்லியிலுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதியையும் காங்கிரஸ் வெல்லவேண்டும்”எனக் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக கெஜ்ரிவால் பங்கெடுத்து வந்தார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆத் ஆத்மி கட்சியும் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை இருந்து வந்தது. அதனால், டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்தது. இதனையடுத்து டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 5ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்ஷித், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருந்தார்.