டிரெண்டிங்

வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு 

வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு 

webteam

திமுகவின் இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு திமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ள சாமிநாதன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக திமுக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, உதயநிதி ஸ்டாலின், அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி, முரசொலி நாளிதழின் நிர்வாக இயக்குநராக இருந்து வரும் நிலையில், அவருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பை ஏற்கனவே மு.க.ஸ்டாலின் நீண்ட காலம் வகித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது. 

இதனிடையே, திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பாக திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.