டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: "ஆன்லைன் வகுப்புக்கு ஃபோன் தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்

துளிர்க்கும் நம்பிக்கை: "ஆன்லைன் வகுப்புக்கு ஃபோன் தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்

நிவேதா ஜெகராஜா

“நான் பெயிண்டர். வேலையில்லை, 2 பிள்ளைகள் உள்ளனர். மகள் 2 ஆம் ஆண்டுடன் படிப்பை நிறுத்தி விட்டார். தற்போது படிப்பைத் தொடர உதவி தேவை” - முருகன், கோவில்பட்டி

“காவலாளியாக இருக்கிறேன். வேலையில்லை. குடும்ப அட்டையும் இல்லை. உணவுப் பொருட்களும் தேவைப்படுகிறது” – மனோகரன், அண்ணாநகர்

“என் கணவர் கட்டடத் தொழிலாளி. பிள்ளைகள் இருவரும் பத்து, பதினோராம் வகுப்பு படிக்கிறார்கள், ஆன்லைன் வகுப்புக்கு ஃபோன் தேவை. நிதி உதவி கிடைத்தாலும், உதவியாக இருக்கும்” – உஷா, ஓசூர்

“கணவர் 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். குடும்ப அட்டை இல்லை, உணவுப் பொருட்கள் தேவை” – முனியம்மாள், கோவை

“கணவன் மனைவி இருவரும் பார்வை மாற்றுத் திறனாளிகளாக இருக்கிறோம். ஊதுபத்தி விற்று வந்தோம். தற்போது வேலையில்லை, குடும்ப அட்டை இல்லை, உணவுப் பொருட்கள் தேவை” – சுந்தர்ராஜன், திருப்பூர்

“மூதாட்டியான நான், தனியாக வசிக்கிறேன். கண்பார்வை இல்லை. உணவுப் பொருட்கள் தேவை” – கவுரம்மாள், ஓசூர்

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'