டிரெண்டிங்

“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி

“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி

EllusamyKarthik

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஒரு அணியாகவும், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒரு அணியாகவும், பாஜக தனியாகவும் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற பரப்புரையில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. 

“இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஒருபுறம் இருக்கின்றனர், மாக்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபுறம் இருக்கின்றனர். ஆனால் மக்கள் அவர்கள் இருவருக்கும் எதிராக நிற்கின்றனர். வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது. 

நான் இங்கு உங்களுக்கு ஒரு உறுதி கொடுக்கவே வந்திருக்கிறேன். மெய்யான மாற்றத்தை கொண்டு வர நான் இங்கு வந்துள்ளேன். அந்த மாற்றம் என்னவென்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி, புலம்பெயரும் தொழிலாளர்களை மாநிலத்திலேய தக்கவைப்பது, எளிய நிலையில் இருப்பவர்களை மேம்படுத்துவதுதான் எங்கள் குறிக்கோள்.

நம் நாடு 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த நன்னாளில் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டியவர்கள் யார் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என மோடி பேசியுள்ளார். 

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மம்தா பேனர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதையும் விமர்சித்துள்ளார் மோடி.