தற்போதைய ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் குறித்து புதிய தலைமுறைக்கு சீமான் அளித்த பேட்டியில், “இந்த ஆட்சி இப்படியே சில நாள் போகும். பின்னர், தற்போதைய ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வர வாய்ப்புள்ளது. அப்படிதான் நான் கணிக்கிறேன். ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்து அதற்கு பின்னால் பாரதிய ஜனதா நிற்பதற்கு வாய்ப்பு உள்ளது.
தினகரனது வெற்றியை மத்தியில் இருக்கக் கூடிய அரசோ, அதிகாரமோ ரசிக்காது. இந்த உட்கட்சிகளுக்குள் ஒரு குழப்பம் வரும். இந்தப் பக்கம் இருந்து சிலர் அந்தப்பக்கம் போவார்கள். அந்தப்பக்கம் இருந்து இந்தப்பக்கம் சிலர் வருவார்கள். இந்தத் தடுமாற்றத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது சட்டமன்ற தேர்தலை கொண்டுவர முயற்சிப்பார்கள்” என்றார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3860 வாக்குகள் பெற்று தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்து 4-ம் இடம் பிடித்துள்ளார்.