டிரெண்டிங்

’put chutney’ மொமன்ட் கொடுத்த மும்பை ஓட்டல்.. சாதூர்யமாக கையாண்ட வாடிக்கையாளர்!

’put chutney’ மொமன்ட் கொடுத்த மும்பை ஓட்டல்.. சாதூர்யமாக கையாண்ட வாடிக்கையாளர்!

JananiGovindhan

பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலுவுக்கும் விவேக்கிற்கும் ஒரு காமெடி சீன் வரும். அதில், ‘சட்னியை எங்க மேன் வெப்ப’ என்ற வடிவேலுவின் கேள்விக்கு ‘இட்லிக்கு பக்கத்துல’ என விவேக் சொல்லிவிட்டு டேபிளில் சட்னியை ஊற்றிவிட்டு அதனருகே இட்லியை வைப்பார். இப்படியாக இருவருக்கும் வாதம் முற்ற ‘put chutney' என வடிவேலு அழுத்தி சொல்லும் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இப்படியாக எடக்கு மடக்கான நிகழ்வெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்குதான் மும்பை நடந்த சம்பவம் இல்லை என உணர்த்தியிருப்பதாக உள்ளது.

அதாவது, மும்பையின் பிரபல ஓட்டலில் ஆர்டர் செய்த மசாலா தோசையை அந்த உணவகத்தினர் தோசையையும், மசாலாவையும் தனித்தனியே பிரித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இதனை ஆர்டர் செய்தவர் ட்விட்டரில் பதிவிட்டதை அடுத்து அந்த பதிவு இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

அதன்படி, ராம்கி என்பவர் ‘நானும் ஒரு ஃபுட் பிளாகர்தான்’ எனக் குறிப்பிட்டு “நேற்று கிருஷ்ணா சாயா என்ற ஓட்டலில் இருந்து மசாலா தோசை ஆர்டர் செய்தேன். ஆனால் உருளைக்கிழங்கு மசாலாவும் தோசையும் தனித்தனியேதான் வந்தது. அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் வீட்டில் மசாலா தோசை செய்து சாப்பிட்டேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.