டிரெண்டிங்

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் முகக்கவசத்தை நீக்கக்கூடாது; வெங்கையா நாயுடு எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் முகக்கவசத்தை நீக்கக்கூடாது; வெங்கையா நாயுடு எச்சரிக்கை

sharpana

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் முகக்கவசத்தை கழற்றிவிட்டுப் பேசக்கூடாது என்று வெங்கையா நாயுடு எச்சரிக்கை செய்துள்ளார். 

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு முன்பு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்தபோது 17 எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலங்களவையின் தலைவரான வெங்கையா நாயுடு “மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்” என்று எச்சரித்துள்ளார். மேலும், அவர், ‘உறுப்பினர்கள் பேசுவதற்கு அசெளகரியமாக இருக்கிறது என்று முகக்கவசத்தை கழற்றுவது சரியானதல்ல. மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசுவதை பொதுமக்கள் பார்க்கிறார்கள். நீங்களே முகக் கவசத்தை கழட்டி பேசுவது தவறான உதாரணமாகிவிடும். கொரோனாவை தடுப்பதில் முகக்கவசங்கள்தான் முன்னணியில் உள்ளன.பல உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது சிரமமாக உள்ளது என்கிறார்கள், நானும்தான் அணிந்து எனது பணிகளைப் பார்க்கிறேன்” என்று அக்கறையோடு பேசியுள்ளார்.

மேலும், ஏற்கனவே, மாநிலங்களவை உறுப்பினர்களான ராம் கோபால் வர்மா, ஜெயா பச்சன் பலர் முகக்கவசத்தை நீக்கி பேசியதால் வெங்கையா நாயுடு உடனுக்குடன் தலையிட்டு அப்படி செய்யவேண்டாம் என்றதோடு மாநிலங்களவையில் காற்று வெளியிலிருந்து உள்ளே வருவதற்கோ வெளியே செல்வதற்கோ ஜன்னல்கள் இல்லை என்பதால் ஏ.சி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசத்தை அணிந்திருப்பதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பானது” என்று அறிவுறுத்தியுள்ளார்.