மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி ஆவேச உரையாற்றியுள்ளார்.
மக்களவையில் இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்ததால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இருப்பினும் மோடி நிறுத்தாமல் தனது உரையை நிறைவுசெய்தார்.
உரையில் குறிப்பிடத்தக்க 20 கருத்துக்கள்:
- நேருவால் ஒன்றும் இந்தியா குடியரசு ஆகவில்லை, காங்கிரஸ் வரலாற்றை திரிக்கிறது.
- சர்தார் வல்லபாய் படேல் மட்டும் இந்தியாவின் முதல் பிரதமாராக இருந்திருந்தால் ஒட்டுமொத்த காஷ்மீரும் நம்முடையதாக இருந்திருக்கும்.
- தமிழகத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட விதம் தெரியுமா? மக்கள் ஏன் ஆட்சியை அகற்றினார்கள்.
- காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது தேர்தலா, இல்லை முடிசூட்டும் விழாவா?
- காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
- ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது.
- எதிர்க் கருத்து என்ற ஒன்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விட முடியாது.
- எவ்வளவுக்கு எவ்வளவு சேற்றை வாரி எங்கள் மேல் அடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு தாமரை மலரும்.
- கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் இருப்பாரா என தெரியவில்லை.
- ஹைதராபாத்தில் தலித் காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் ராஜிவ் காந்தி நடந்து கொண்டதை உலகமறியும்.
- 90 முறைக்கு மேல் மாநில அரசாங்கங்களை அகற்றி, சட்டத்தை தவறாக பயன்படுத்தியது காங்கிரஸ்.
- ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
- ஆதார் மூலம் தரகர்கள் வேலை இழந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு கோபம் வருவது நியாயமானதே.
- ஜி.எஸ்.டி வரியை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என எதிர் கட்சிகள் நினைத்தன.
- ஏழைகள் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் நிலையை பார்க்கும் போது மகிழ்கிறேன்.
- முதலமைச்சர்களாக இருந்து சிறையில் இருப்பவர்களை நாடறியும்.
- சிறுகுறு தொழில் புரிபவர்களுக்கான வரியை குறைத்ததால் நடுத்தர வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
- கடன் வாங்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி காங்கிரஸ்.
- காங்கிரஸ் நாட்டை துண்டு துண்டாக்கியது. பாஜக மாநிலங்களை உருவாக்கியது.
- டோக்லாமில் இராணுவ வீரர்கள் நின்று கொண்டிருக்கும் சமயத்தில், சீன ஆட்களை சந்திப்பதுதான் காங்கிரஸ்.