டிரெண்டிங்

நீரிலும் ஆகாயத்திலும் இயங்கக்கூடிய விமானத்தில் பறந்த மோடி

நீரிலும் ஆகாயத்திலும் இயங்கக்கூடிய விமானத்தில் பறந்த மோடி

webteam

நாட்டில் முதல்முறையாக, சபர்மதி ஆற்றில் இயக்கப்பட்ட கடல்வழி விமானத்தில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.

நீரிலும் ஆகாயத்திலும் இயங்கக்கூடிய இந்த விமானத்தில் பயணித்த மோடியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. 
குஜராத் சட்டமன்றத்திற்கான இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அஹமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி
இன்று திட்டமிட்டிருந்த தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மத பிரச்னைக்கு வாய்ப்புள்ள இடம்
என்பதா‌ல் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கடல் விமானம் மூலம் தாரோய் அணை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக அம்பாஜி கோயிலுக்கு
சென்றார். பிரதமரின் இந்தக் கடல்வழி விமான பயணம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. மேலும், தான் இதுப்போன்ற சிறப்புமிக்க விமானத்தில்
பயணம் செய்ய இருப்பதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.