டிரெண்டிங்

மம்தாவின் முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு

மம்தாவின் முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு

Rasus

மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத பாஜக ஆட்சிக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வலுவான கூட்டாட்சிக்கும் மாநில கட்சிகளின் ஒற்றுமைக்கும் திமுக எப்போதும் ஆதரவாக உள்ளது என்றும் ஸ்டாலின் தன் பதிவில் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் மாற்றாக 3-வது அணியை உருவாக்க மம்தா பானர்ஜி முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல்கள் உள்ள நிலையில் ஸ்டாலினின் இக்கருத்து வெளியாகியுள்ளது.