டிரெண்டிங்

பொதுமக்களை பீதியில் ஆழ்த்திய மருத்துவரை நீக்குக: மு.க.ஸ்டாலின்

பொதுமக்களை பீதியில் ஆழ்த்திய மருத்துவரை நீக்குக: மு.க.ஸ்டாலின்

webteam

டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு நடத்த வந்த மத்தியக்குழு மருத்துவர் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவரை அக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் இல்லை என எய்ம்ஸ் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டியளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 12 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 40 பேரின் மரணம் பெரிதல்ல என மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறியிருப்பது, தமிழக மக்களின் உயிரை துச்சமாக நினைத்து அவமதிக்கும் போக்காகவே இருக்கிறது. டெங்குவை ஒழிக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஆய்வுக்குழுவினர் மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அறிவுறுத்த வேண்டும் என்றும் அசுதோஷ் பிஸ்வாசை அக்குழுவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.