டிரெண்டிங்

விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்

Rasus

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “விஷால் வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் அலுவலரின் செயல்பாட்டில் சந்தேகம் உள்ளது. எனவே இதுதொடர்பாக டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகரில் முறைப்படி தேர்தல் நடந்தால் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது என்ற திருமாவளவனின் கருத்து உண்மையாக கூட இருக்கலாம். சட்ட விதிகளின் படி ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். மாயமான மீனவர்கள் குறித்து அரசு முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை” என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக விஷால் தெரிவித்தார். இறுதியில் பல்வேறு திருப்பங்களுடன், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.