டிரெண்டிங்

கட்டுப்பாட்டை மீறினால் சர்வாதிகாரியாக இருப்பேன்: ஸ்டாலின்

கட்டுப்பாட்டை மீறினால் சர்வாதிகாரியாக இருப்பேன்: ஸ்டாலின்

Rasus

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் சிலரை நீக்க அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க.வின் கழகப் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கிய இந்தக் கள ஆய்வு மார்ச் 22ஆம் தேதி வரை, 32 நாட்கள் நடைபெறுகிறது. இதுவரை நடந்த கள ஆய்வில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது அதிகப்படியான புகார்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதேபோல் கள ஆய்வுக்கு முன்பே 8 மாவட்டச் செயலாளர்கள் மீதும் புகார்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அவர்களை மாற்ற மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு மாவட்ட கள ஆய்வு கூட்டத்திலும் பேசும்போது, மக்களிடத்தில்தான் ஜனநாயகவாதியாக இருப்பேன் என்றும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மத்தியில் சர்வாதிகாரியாக இருப்பேன் என்றும் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருந்தார். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 23 மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இதுவரை கள ஆய்வு நடத்தியிருக்கிறார்.