டிரெண்டிங்

கருணாநிதியிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின்

கருணாநிதியிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின்

rajakannan

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தார். 

கட்சியின் தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார். பிறந்தநாளையொட்டி வாழ்த்துப் பெறுவதற்காக மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஆகியோருடன் கோபாலபுரத்தில்‌‌ உள்ள கருணாநிதியின்‌ இல்லத்திற்கு ஸ்டாலின் சென்றார். ‌

மனைவி துர்கா எழுதிய 'அவரும்-நானும்' புத்தகத்தை அளித்து ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். தந்தையின் பிறந்தநாள் சந்திப்பின்போது, கருணாநிதியிடம் நான் யார் என்று தெரிகிறதா என உதயநிதி கேட்டார். நீங்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோவைப் பார்த்தேன் என்றும் கருணாநிதியிடம் அவர் கூறினார்.