டிரெண்டிங்

மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

Rasus

பள்ளிகளில் மாணவ மாணவிகளை துன்புறுத்தும் ஆசிரியர்கள், அதிகாரிகள் யாராயினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர் மற்றும் கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக அரசின் விலையில்லா மடிகணினிகளை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் அல்லது இணையதளம் வாயிலாகவும் பதிவு
செய்துகொள்ளலாம் என்றார். அந்த மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பள்ளிகளில் மாணவ மாணவிகளை துன்புறுத்தும் ஆசிரியர்கள், அதிகாரிகள் யாராயினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.