டிரெண்டிங்

பாட்டு மன்றமாக மாறிய சட்டமன்றம்...

பாட்டு மன்றமாக மாறிய சட்டமன்றம்...

webteam

தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிப்பது என்பது பகல் கனவாகவே முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கருணாஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பாட்டு பாடினார்கள். இதனையடுத்து, நானும் பாட்டு ஒன்று பாடுகிறேன் என, "ஒரு பொம்பலாட்டம் நடக்குது, ரொம்ப புதுமையாக இருக்குது நாலுபேரு நடுவிலே, நூல் ஒருவர் கையிலே" என மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி பாடினார். மேலும் அடுத்த நிதிநிலை அறிக்கையில் கேள்வி கேட்கும் இடத்தில் அதிமுக இருக்குமா என தெரியாது என்ற அவர், ஆனால் பதில் செல்லும் இடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக இருக்கும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அவை முன்னவர் செங்கோட்டையன் உறுப்பினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த ஐந்து ஆண்டு ஆட்சியை நூறாண்டு பேசும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் ஜெயகுமார், உறுப்பினர் பேசியதை கேட்கும் போது முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சொல்லும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது என " கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது, அதே போல் திமுக ஆட்சிக்கும் வராது என தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக உறுப்பினர் புகழேந்தி, தான் பாடிய பாடலின் பொருள் தமிழக மக்களுக்குப் புரியும் என்றார்.