இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நடிகர்கள் கட்சி தொடங்குவது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் போன்றது என்றும், இரண்டு மாதங்களில் அது காணாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் சர்ச்சை குறித்து ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “ஆண்டாள் ஒரு கடவுள். அந்த கடவுளை எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வணங்கி வருகின்றனர். நானும் வணங்கி வருகிறேன். அந்த பக்தர்களின் மனம் புண்படும்படி கருத்து சொல்லக் கூடாது. வேறு மதமாக இருந்தால் இந்த கருத்தினை சொல்ல முடியுமா? இந்துமதம் என்ன கிள்ளுக்கீரையா?. எதற்கு இப்படி கருத்து சொல்ல வேண்டும். இருப்பினும் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளதால் பிரச்னை செய்யக்கூடாது” என்றார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு நடிகர்களாக கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறினால், கட்சிக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். நடிகர்கள் கட்சி தொடங்குவது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் போன்றது. ஒரு மாதம், இரண்டு மாதம் ஜோராக ஓடும். பின்னர் இரண்டு மாதங்களில் காணாமல் போய்விடும் என்று கூறினார்.