பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இன்றைக்கு டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அனுப்பி, மன்மோகன் சிங்கை சந்தித்து, கடுமையாக கொசுக்கள் வந்திருக்கிறது, அவை மக்களிடம் பரவாமல் இருக்க வழிவகை செய்வதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நிபுணர்களை அனுப்பி வைக்க சொன்னார்கள்” என்று கூறினார். பிரதமர் மோடியை சந்தித்து என்பதற்கு பதிலாக, மன்மோகன் சிங் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக கொடைக்கானலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, வயது முதிர்ந்த பெண்மணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிழவி என்று திட்டியது எல்லோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.