டிரெண்டிங்

25 முறை பழுதான மைக்: ஆத்திரமடைந்த அமைச்சர்

25 முறை பழுதான மைக்: ஆத்திரமடைந்த அமைச்சர்

Rasus

அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்ற அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட விழாவில் 25 முறை மைக் பழுதானதால் அமைச்சர் விரக்தி அடைந்தார்.

சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன் பேரூராட்சி மற்றும் அரியப்பம்பாளையம் பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 180 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பிலான வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் விழா அரியப்பம்பாளையத்தில் நடைபெற்றது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று 180 பேருக்கு ரூ.2.10 லட்சம் மானியத்துடன் வீடு கட்ட பணி ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது மைக் அடிக்கடி பழுதாகியது. ஒரு மைக் பழுதாகியபோது கார்டுலஸ் மைக் வழங்கினர். அதுவும் பழுதாகியதால் அமைச்சரால் தொடர்ந்து பேச முடியவில்லை. இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். தொடர்ந்து 25 முறை மைக் பழுதாகியதால் விரக்தியடைந்த அமைச்சர் இறுதியல் மைக் இல்லாமல் பேசி விழாவை முடித்து வைத்தார்.