ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காக பேசியதற்காக இலங்கை நாட்டினர் வைகோவை தாக்க முயன்றதற்காக மதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் நீதிக்காக ஐநா மன்றத்தில் முழக்கமிடும் வைகோவின் பாதுகாப்பை ஐநா மனித உரிமை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அரசைக் கண்டித்து வரும் 27ஆம் தேதி சென்னையில் இலங்கை தூதரகம் முன் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் பேசிய பின்னர், சிங்களர்கள் தன்னை சூழ்ந்து கொண்டு பிரச்னை செய்தததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். ஜெனிவாவிலிருந்து தொலைபேசி வாயிலாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலிருந்து தன்னை வெளியேற்ற சிங்களர்கள் சூழ்ச்சி செய்வதாகவும் புகார் தெரிவித்தார்.