டிரெண்டிங்

பொருளாதாரத்தை புதுப்பிக்க மன்மோகன்சிங் சொல்லும் 3 வழிகள்!

பொருளாதாரத்தை புதுப்பிக்க மன்மோகன்சிங் சொல்லும் 3 வழிகள்!

sharpana

முன்னாள் இந்திய பிரதமரும் பொருளாதார மேதையுமான டாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதாரத்தை புதுப்பிக்க மூன்று வழிகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதிமுதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்திய பொருளாதாரமே முடங்கிக்கிடக்கிறது. ஏற்கனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் அனைத்து துறைகளுமே வீழ்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மன்மோகன் சிங் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

முதலாவதாக ”மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படுவதை  அரசு உறுதி செய்ய வேண்டும். இரண்டாவதாக, மக்களுக்கு நேரடி பண உதவி செய்யவேண்டும். கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் அவர்களின் வணிகங்களை பெருகச்செய்யவேண்டும். மூன்றாவதாக, நிறுவன சுயாட்சி மற்றும் செயல்முறைகள் மூலம் நிதித்துறையை அரசு சரிசெய்யவேண்டும்” என்றிருக்கிறார்.   

மேலும், அவர் அதிகக்கடன் வாங்குவது தவிர்க்கமுடியாதது. கடன் வாங்கினால் எல்லைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதோடு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யமுடியும். கடன் வாங்குவதில் வெட்கப்படக்கூடாது. அப்படி வாங்கும் கடனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் விவேகத்தோடு இருக்கவேண்டும். மூன்று சகாப்பதங்களாக இந்தியாவின் வர்த்தக கொள்கை அனைத்து பகுதிகளிலும் மக்கள்தொகையின்  மகத்தான பொருளாதார லாபங்களை கொண்டுவந்துள்ளது. எனவே, பொருளாதார மந்தநிலை தவிர்க்கமுடியாதது” என்றும் கூறியிருக்கிறார்.