டிரெண்டிங்

தசைப் பிடிப்பையும் பொருட்படுத்தாது காதலை சொன்ன இளைஞன்.. க்யூட் ப்ரோபோசல் வீடியோ!

தசைப் பிடிப்பையும் பொருட்படுத்தாது காதலை சொன்ன இளைஞன்.. க்யூட் ப்ரோபோசல் வீடியோ!

JananiGovindhan

உற்ற தோழியாக பழகிய பெண்ணிடம் விநோதமான முறையில் காதலை வெளிப்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நெகிழ்ச்சி அடையும் வகையில் இருக்கும்.

ஆனால் காதலை வெளிப்படுத்த எந்த வலியும் தடையாக இருக்காது என்பது தற்போது வைரலாகியிருக்கும் வீடியோ மூலம் அறியலாம். அதன்படி Goodnews Movement என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

அதில், அயர்ன்மேன் ட்ரைதலான் போட்டியில் பங்கேற்றிருந்த இளைஞர் ஒருவர் தான் காதலித்து வந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த முட்டியிட்டு என்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா எனக் கேட்டு மோதிரத்தை காண்பிக்கும்போது அந்த இளைஞரின் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு விட, வலி தாங்க முடியாமல் சரிந்து விழுகிறார்.

கீழே விழுந்தவரை அவர் அருகே இருந்த சிலர் தாங்கிப் பிடித்து உற்சாகமூட்டுகிறார்கள். அதன் பின்னர் அந்த இளைஞர் காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். இதனையடுத்து அப்பெண் அந்த இளைஞரும் காதலை ஏற்றுக்கொண்டு அவரை கட்டியணைத்து முத்தமிடுகிறார்.

இந்த வீடியோவை இரண்டு லட்சத்துக்கும் மேலானோர் லைக் செய்ததோடு, 30 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வீடியோவில், “எந்த தசைப்பிடிப்பு காதலை வெளிப்படுத்த தடையாக இருக்காது. அந்த இளைஞரும் அதையே செய்திருக்கிறார்” என கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரையும் வியப்படையச் செய்திருக்கிறது.

இதனிடையே ட்ரைதலான் போட்டி என்பது நீச்சல், சைக்கிளிங் மற்றும் மாரத்தான் போன்ற மூன்றையும் செய்வதையே குறிக்கிறது. இந்தப் போட்டி வடக்கு ஐரோப்பாவின் எஸ்டோனியாவில் நடந்திருக்கிறது என டெய்லி ஸ்டார் செய்தியின் மூலம் அறிய முடிகிறது.