மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னுடைய மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் கடுமையாக விமர்சித்துள்ளார். திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை மம்தா விமர்சித்திருந்த நிலையில், பிப்லப் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து பிப்லாப் குமார் தேப் பேசுகையில், “உங்கள் மூளையை மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும். மன அமைதிக்காக கோயிலுக்கு சென்று வாருங்கள்” என்றார்.
முன்னதாக, திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, “திரிபுரா தேர்தல் வெற்றியில் பாஜகவிற்கு எவ்வித பங்கும் இல்லை. திரிபுராவில் வெற்றி பெறுவது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதை போன்றதாகும்” என்று கூறியிருந்தார்.
திரிபுராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 59 தொகுதிகளில் 35 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று 25 ஆண்டுக் மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையை தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.