உடல்நிலை சரியில்லை என்றால் நாம் நாடுவது மருத்துவரைதான். அவர்கள் சிறிய க்ளீனிகிலும் இருக்கலாம். அல்லது பெரிய மருத்துவமனை மற்றும் அரசாங்க மருத்துவமனைகளிலும் பணிபுரியலாம். அது நமக்கு பிரச்சனையில்லை. ஆனால் அவர்கள் நமது நோய்க்காக எழுதிதரும் மருந்து சீட்டில்தான் பிரச்சனை இருப்பதாக அரசாங்கம் எடுத்த சர்வேயின் முடிவு தெரிவிக்கிறது. அதாவது 45% மருத்துவர்களில்எழுதிதரும் மருந்துகள் முழுமையற்றவை என்று சர்வேயின் முடிவு தெரிவிக்கிறது .
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) 2019- 2020 ல் ஒரு ஆய்வினை மேற்க்கொண்டது. அதன்படி டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகள் உண்மையில் நோயாளிகளுக்கு இது, நன்பகதன்மையானதா? முழுமையான தீர்வு கிடைக்கிறதா? என்ற அடிப்படையில் ஒரு சர்வேவை எடுத்தது.
அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளிலும், இந்தியாவில் உள்ள மூன்றாம் நிலை பராமரிப்பு , கல்லூரிகள் இணைந்த மருத்துவமனைகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின்படி இந்த மருத்துவமனைகளில் இருந்து மொத்தம் 7,800 நோயாளிகளின் மருந்துச் சீட்டுகள் எடுக்கப்பட்டு, அதில் 4,838 நோயாளிகளின் சீட்டுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது, இதில் சுமார் 2,171 மருந்துச் சீட்டுகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி மருத்துவர்கள் எழுதிதரும் மருந்துகள் முறையற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது.
நோயாளிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் இருந்தாலும், அவற்றிற்கான முறையான மருந்துகள் எழுதப்படுவதில்லை. எழுதப்பட்ட மருந்துகளின் உட்கொள்ளும் டோஸின் அளவு மற்றும், அது எடுத்துக்கொள்ளும் கால அளவின் வேறுபாடு உள்ளது. தடை செய்யப்பட்ட மருந்துகள், தேவையில்லாத மருந்துகள் கொடுக்கப்பட்டு இருப்பதும், விலை அதிகமாக உள்ள மருந்துகள் எழுதப்பட்டு இருப்பதும் ஆராய்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த முடிவானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டு நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.