டிரெண்டிங்

தேர்தல் எதிரொலி: மதுரையில் உரிமம் பெற்ற 896 துப்பாக்கிகள், காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

தேர்தல் எதிரொலி: மதுரையில் உரிமம் பெற்ற 896 துப்பாக்கிகள், காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

kaleelrahman

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மதுரையில் 896 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின் பேரில், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதில் மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 45 காவல் நிலையங்களில் 532 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில், 511 துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 11 துப்பாக்கிகள் விரைவில் உரியவர்களிடம் இருந்து பெறப்படும் என மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மதுரை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 30 காவல் நிலையங்களில் 452 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து, 385 துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். இதன்படி, 56 துப்பாக்கிகள் வங்கிகள், உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 துப்பாக்கிகள் ஓரிரு நாளில் உரியவர்களிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்தார்.