டிரெண்டிங்

நாடாளுமன்றத் தேர்தல்-2019 : பெண்களுக்கு சமமாக வாய்ப்பளித்து அசத்திய நாம் தமிழர் கட்சி !

webteam

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் போட்டியிட 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவிகிதம் பெண்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று சீமான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் பெண் வேட்பாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. வேலூர் - தீபலட்சுமி
2. பெரம்பலூர் - க. சாந்தி 
3. வடசென்னை - பி. காளியம்மாள்  
4. பொள்ளாச்சி - அ. சனுஜா 
5. இராமநாதபுரம் - தி. புவனேஸ்வரி 
6. கடலூர் - சா. சித்ரா 
7. திருநெல்வேலி - பா. சத்யா  
8. தருமபுரி - ர. ருக்மணிதேவி 
9. திருவள்ளூர் (தனி) - ம. வெற்றிச்செல்வி
10. விழுப்புரம் (தனி) - பிரகலதா 
11. நாகப்பட்டினம் (தனி) - பொ. மாலதி
12. மயிலாடுதுறை - கு. சுபாஷினி
13. நீலகிரி (தனி) - சே.மணிமேகலை 
14. ஈரோடு - மா.கி.சீதாலட்சுமி
15. காஞ்சிபுரம் (தனி) - த.ரஞ்சனி
16. தென்சென்னை - அ.ஜெ. ஷெரின்
17. மதுரை - க. பாண்டியம்மாள்
18. சிவகங்கை - வே. சக்திப்பிரியா
19. ஆரணி - அ.தமிழரசி
20. புதுச்சேரி - நி. ஷர்மிலாபேகம்

இந்த பட்டியலில் உள்ள 20 பெண் வேட்பாளர்களுமே நன்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக போட்டியிடும் 20 தொகுதியில், அக்கட்சி சார்பில் இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதியில், அக்கட்சி சார்பில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதியில், அக்கட்சி சார்பில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடும் 5 தொகுதியில், அக்கட்சி சார்பில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 40 தொகுதிக்கு 20 என்று 50 சதவிகிதம் பெண்கள் போட்டியிடுவார்கள் என்று சீமான் தாம் அறிவித்தபடியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகள் எல்லாம் பெண்களுக்கு குறைவான சீட்டுகளே கொடுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் இந்த நடவடிக்கையை அரசியல் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.