மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி நாளை வாரணாசியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். பிரதமரின் வேட்புமனு தாக்கலுக்காக வாரணாசியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பிரதமர் வேட்பு மனுதாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி வாரணாசியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேறகொள்ளபட்டு வரும் நிலையில் இன்று மாலை நடைப்பெறும் மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.