ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் PT web
LIVE UPDATES

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

Jayashree A

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தனித் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.

ஆளுநர் ஒப்புதலை அடுத்து இந்த மசோதா சட்டமாக தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டு விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மோசமான விளைவாக தமிழ்நாட்டில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த மசோதாவிற்கு ஆளுநர் தாமதம் இல்லாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. பொதுமக்கள் மத்தியிலும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் கால தாமதம் ஆவது குறித்து அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இத்தகைய சூழலில் ஆளுநர் இன்று மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.