டிரெண்டிங்

ராட்சத மலைப்பாம்பை பிடிக்க இத்துனூண்டு கோழியா? வைரல் வீடியோவும், நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷனும்!

ராட்சத மலைப்பாம்பை பிடிக்க இத்துனூண்டு கோழியா? வைரல் வீடியோவும், நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷனும்!

JananiGovindhan

மீன்களை பிடிப்பதற்கு சாதுர்யமாக தூண்டில் போடுவது போல, அச்சுறுத்தும் விலங்குகள் - ஊர்வன உயிரினங்களான கொடிய பாம்புகள் பிடிப்பதற்கும் பல்வேறு வகையான வழிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம்தான். அது குறித்த பல வீடியோக்களும் சமூக வலைதளங்களிலும் காணக் கிடைக்கின்றன.

அப்படித்தான் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றை பிடிக்க உயிரோடு இருக்கும் கோழியை வைத்து சிக்க வைத்திருக்கும் வீடியோவொன்று கிட்டத்தட்ட அரை கோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவின் கேப்ஷனில் “உயிருள்ள கோழியை கொண்டு மலைப்பாம்புக்கு வைக்கப்பட்ட பொறி” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெறும் 15 நொடிகளே இருக்கும் அந்த வீடியோவில், ராட்சத மலைப்பாம்புக்கு வைக்கப்பட்ட பொறியை காண முடியும். அதில், பொறி வளையத்துக்கு வெளியே உயிருள்ள கோழியை பிடிக்க சீறிப்பாய்ந்து அந்த மலைப்பாம்பு வந்த போது, சட்டென அதனை பிடிக்க வைத்திருந்த நீலநிற டியூப்புக்குள் சிக்கிக்கொள்கிறது. தனக்கு இரை கிடைக்குமென வந்த மலைப்பாம்பு, இறுதியில் தானே இரையாகி, அந்த கோழியையும் விழுங்க முடியாமல் போயிருக்கிறது!

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் மலைப்பாம்பை பிடிக்க இப்படியொரு உத்தியை கையாண்டதை எண்ணி வியந்துப் போனதோடு, “அனக்கோண்டா படத்தில் பார்த்த பாம்புகள் மிகையானது என நினைத்திருந்தேன். ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் புரிந்தது” “இப்படியொரு உயிரினம் இன்னும் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது” என பல கமென்ட்ஸ்கள் இடப்பட்டிருக்கின்றன.

இருப்பினும், சிலர் இந்த வீடியோ போலியானது என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அதே பதிவில் இணைத்திருக்கிறார்கள். அதில் ஒரு பயனர், "இது போலியானது" என்று ட்வீட்டியுள்ளதோடு, இருவர் சிறிய பொறியை அமைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். 

மேலும், மலைப்பாம்பு பெரிதாகத் தெரிந்தாலும் கோழியுடன் ஒப்பிடும்போது பொறி சிறியதாகத் தெரிந்ததால் வீடியோ போலியானதாகவே இருக்கக் கூடும் என்று சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.