டிரெண்டிங்

என்னை முட்டாள் என்று சொல்கிறாரா? - கோவை சரளா

என்னை முட்டாள் என்று சொல்கிறாரா? - கோவை சரளா

webteam

வாக்களிக்‌கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாக கோவை சரளா தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய குமரவேல் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “கட்சியில் சேர்த்த ஒருவாரத்தில் கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியதை ஏற்க முடியவில்லை. அதேபோல், கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என விமர்சித்தார்.

இந்நிலையில், வாக்களிக்‌கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாக கோவை சரளா தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி ‌மய்யத்தில் இருந்து விலகிய குமரவேல், கோவை சரளா குறித்து விமர்சனம் செய்திருந்த நி‌லையில், புதிய தலைமுறையின் 'இன்று இவர்'‌ நிகழ்ச்சிக்கான நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “குமரவேல் சொன்னதுபோல் நான் கட்சிக்கு வந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகிறது. அதனால் எனக்கு அரசியல் தெரியாது. ஒன்னுமே தெரியாது. ஒரு முட்டாளை கொண்டு வந்து கமல்ஹாசன் வைத்துள்ளார் என அவர் சொல்கிறாரா? அவர் நேரடியாக என்னிடம் சொல்லட்டும். நான் அவருக்கு பதில் சொல்கிறேன். அவர் ராஜினாமா குறித்து என்னிடம் கேட்ககூடாது. நான் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர். அந்த அடிப்படையில்தான் கமல்ஹாசன் என்னை அழைத்தார். என்னை மட்டும் அழைக்கவில்லை. மற்றவர்களும் இருந்தார்கள். அதாவது அரசியல் சம்பந்தபடாத பெரியவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? நான் மட்டும் தான் தெரிகிறேனா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.