டிரெண்டிங்

கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல ! சர்கார் குறித்து டிடிவி தினகரன்

கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல ! சர்கார் குறித்து டிடிவி தினகரன்

webteam

சர்கார் திரைப்படத்தில் வரும் “கோமளவல்லி” எனற கதாபத்திரம் ஜெயலலிதாவின் இயற்பெயர் இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த “சர்கார்”  திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தீபாவளி அன்று வெளியாகியது.  பல தடைகளைத் தாண்டி சர்கார் திரைப்படம் திரைக்கு வந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். கள்ள ஓட்டு என்ற கருத்தினை மையமாக வைத்து இந்தக் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

“சர்கார்” திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி என்ற பெயர் இருக்கிறது. இப்பெயர் மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாகவும் கூறபடுகிரது. இதனிடையே அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் “சர்கார்” திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் கேள்விக்கு பதிலளிக்கும் போது,"கோமளவல்லி ஜெயலலிதாவின் பெயர் அல்ல.தன் பெயர் கோமளவல்லி அல்ல என ஜெயலலிதாவே என்னிடம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயர் கோமளவல்லி என்று யார் சொன்னது ? திரைப்படத்தில் கூட அந்தப் பெயரில் நடித்ததில்லை என ஜெயலலிதா என்னிடம் கூறினார்” என்று அவர் தெரிவித்தார்.  மேலும் ஜெயலலிதா குறித்து தவறான கருத்து இடம் பெற்றிருந்தால் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.