டிரெண்டிங்

சிசிடிவி கண்காணிப்பில் கொடநாடு எஸ்டேட்

சிசிடிவி கண்காணிப்பில் கொடநாடு எஸ்டேட்

webteam

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்துக்கு பிறகு பங்களாவை சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி கொலை - கொள்ளை நடந்தது. காவலாளியை கொன்று விட்டு 10 பேர் தப்பிசென்றனர்.
எப்போதும் பாதுகாப்பு நிறைந்து காணப்படும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை- கொள்ளை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் ஒரு விபத்தில் பலியானார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்துக்கு பிறகு பங்களாவை சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொடநாடு பங்களாவில் கொலை- கொள்ளை சம்பவத்துக்கு பிறகு போலீசார் கண்காணிப்பை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி முதல் கட்டமாக கொடநாடு பங்களாவை சுற்றிலும் 63 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பங்களாவை சுற்றி உள்ள 12 நுழைவு வாயில்கள், பங்களாவில் உள்ள ஹெலிபேடு தளம், படகு இல்லம், மற்றும் கொடநாடு காட்சிமுனை, பங்களா வளாகத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை, மலர் சாகுபடி பசுமை குடில் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கொடநாடு தேயிலை எஸ்டேட்டிலும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சுமார் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடநாடு எஸ்டேட் பங்களா தற்போது 63 கேமிராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.