டிரெண்டிங்

இவ்வளவு நன்மைகளா?... ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கீரை வகைகள்..!

webteam

கீரை உணவின் எண்ணிலடங்கா மருத்துவ பயன்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

கீரை அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பீட்டா கரோட்டினை உள்ளடக்கியது. இவை நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை சிறப்பாக செயலுற உதவிபுரிகிறது. அதே போல கீரையில் உள்ள வைட்டமின் சி, மக்னீசியம், வைட்டமின் இ உடலுக்கு அதிக அளவு நன்மைகளை வழங்குகிறது.

2. உடல் எடைக் குறைப்பில் முக்கியப்பங்கு

கீரையில் அதிக அளவு நார்ச்சத்து இடம்பெற்றுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் நாம் அதிக அளவு உணவு உண்ணுதலை தடுக்கிறது. அதே போல உணவை செரிமானம் செய்வதற்கு உறுதுணையாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் கீரை ஒரு தீர்வாக இருக்கிறது.

கீரையை தொடர்ச்சியாக உண்டு வருவதின் வழியே உடலின் சர்க்கரை அளவு, இரத்தம் அழுத்தம் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். கீரையில் உள்ள நைட்ரேட்ஸ் ரத்த அழுத்ததை சீராக்க உதவுவதால், அவை நம்மை மாரடைப்பில் இருந்து காக்கிறது.

3. உடல் நீரேற்றத்தில் முக்கியப்பங்கு 

உடல் நீரேற்றம் நமது உடல் உள் உறுப்புகளை திறம் பட செயலாற்ற உதவி புரிகிறது. எலும்பு இணைப்புகளில் முறையான உராய்வு இருக்க போது நீர் இருத்தல், தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்தல், ஆழமான தூக்கத்திற்கு உதவி புரிதல் உள்ளிட்டவற்றிற்கு நீரேற்றம் மிக முக்கியமானது. அந்த வகையில் கீரை வகைகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நீரேற்றம் நமது சீரான நிலையில் இருக்கும்.

கீரையில் உள்ள தாவரக் கலவைகள் கண்ணின் ஆரோக்கியத்திற்கும் பெரும் உதவியாக இருக்கின்றது. சூரிய ஒளியால் கண்ணில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யவும், புற்றுநோயை எதிர்த்து போராடுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சிறுநீரகத்தில் கல் பிரச்னை உள்ள நோயாளிகள், மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து கீரையை எடுத்துக்கொள்ளலாம்.