டிரெண்டிங்

தோல்வியையே தழுவாத கேரள தலைவர் கே.எம்.மணி உயிரிழந்தார்

தோல்வியையே தழுவாத கேரள தலைவர் கே.எம்.மணி உயிரிழந்தார்

rajakannan

சட்டசபைத் தேர்தலில் தோல்வியே அடையாத கேரள மூத்த அரசியல் தலைவர் கே.எம்.மணி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

கேரள மாநிலம் கொட்டியம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.எம்.மணி. மூத்த அரசியல் தலைவரான இவர் கேரள சட்டசபையில் அதிகமுறை உறுப்பினராக இருந்தவர் என்ற சாதனைக்குரியவர். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனியாக பிரிந்து, 1964இல் கேரள காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ச்சியாக கூட்டணி அமைத்து வந்தார்.

அவரது சொந்த தொகுதியான பாலாவில் இருந்து 1965ம் ஆண்டில் முதன் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 13 முறை அவர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர். அதிகமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஏப்ரல் 1977 முதல் செப்டமர் 1978 வரை மற்றும் அக்டோபர் 1978 முதல் ஜூலை 1979 வரை கேரள உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதேபோல், 1980 முதல் 1986 வரை நிதி மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கே.எம்.மணி இந்தமாத தொடக்கத்தில் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86. கேரள அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக அவர் இருந்துள்ளார்.