டிரெண்டிங்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன்?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன்?

webteam


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன் என திமுக எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சிதலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ எனவும் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்திற்கு புரட்சி தலைவி ஜெ.ஜெயலிலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ எனவும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ண ஆலந்தூர் மெட்ரோ என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

இந்நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது “ 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் 14,000 கோடி செலவில், அன்றைய துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்முயற்சியால் மட்டுமே கொண்டு வரப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தலைவர் கலைஞர் பெயரை வைக்காமல் இருட்டடிப்பு செய்வது ஏன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.