டிரெண்டிங்

குமாரசாமிக்கு முதல்வர் பதவி - பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் திட்டம்

குமாரசாமிக்கு முதல்வர் பதவி - பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் திட்டம்

rajakannan

கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது சந்தேகமாக உள்ள நிலையில் அங்கு தொங்கு சட்டசபை அமையும் நிலை அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மே 12ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதலில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. 
ஆனால், நேரம் செல்ல செல்ல பாஜகவின் கை ஓங்கியது. ஒரு கட்டத்தில் பாஜகவுக்கு 120 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 60 இடங்களுக்கு கீழ் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, எடியூரப்பா மற்றும் பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

ஆனால், பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கர்நாடகாவின் டிரண்ட் மாறத் தொடங்கியது. பாஜக படிப்படியாக குறைந்து, 110 இடங்களுக்கு கிழேயும், காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு மேலும் முன்னிலை பெற்றது. 2.30 மணி நிலவரப்படி பாஜக 106, காங்கிரஸ் 74 மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆதரவை காங்கிரஸ், பாஜக நாடி வருகின்றன. இரு கட்சிகளின் தரப்பிலும் குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவியை தருவதற்கும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், கர்நாடக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.