டிரெண்டிங்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு: பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

webteam

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,காவிரி மேலாண்மை வாரியம் என்பது அரசியல் சாசன சட்ட விரோதமானது என சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மேலும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது பரிந்துரைதானே தவிர உத்தரவல்ல என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து நேரில் சந்திக்க எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார். 

காவிரி பிரச்னையில் நடுவர் மன்றம் கூறிய திட்டம் என்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஆமோதிக்கவில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவசியமே எழவில்லை என்றும் கர்நாடக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைப்பதாக அமையும் என்றும் சித்தராமையா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.