ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்பது குறித்து கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கர்மவீரர் காமராஜரின் 118-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அவரது உருவப்படத்திற்கும், திருவுருவச் சிலைக்கும் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.
இது குறித்து தெரிவித்த அவர், ரஜினி ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்தது. ஆனால் கொரோனா காரணமாக அது தள்ளிப்போகிறது. நவம்பர் மாதத்தில் அவர் கட்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனியாகத் தான் கட்சி தொடங்குவார்.
கே.எஸ். அழகிரியை காணவில்லை. அவர் ஓடி ஒளிந்துவிட்டார். விரைவில் அவரை மாற்றப்போவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாவலரை அசிங்கப்படுத்தியவர் ஸ்டாலின். ஆனால் அவர் படத்தை அறிவாலயத்தில் திறப்பது எந்த விதத்தில் நியாயம்? ஸ்டாலின் பேங்காங்க் போனது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்