டிரெண்டிங்

டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா தகுதிநீக்கம்

டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா தகுதிநீக்கம்

rajakannan

டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த தகுதிநீக்கம் அமலுக்கு வருவதாக டெல்லி சட்டசபை தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. இவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமைச்சர் ஒருவரிடம் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி இருந்தார். சட்டப்பேரவைக்கு வருவதில்லை என்றும் கெஜ்ரிவால் மீது அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தொடர்ந்து அதிருப்தியாக கபில் மிஸ்ரா செயல்பட்டு வந்த நிலையில் அவர் இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.