டிரெண்டிங்

பொதுமக்கள் அஞ்சலிக்காக சாத்தான்குளம் தந்தை-மகன் உடல்: கனிமொழி, ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி

பொதுமக்கள் அஞ்சலிக்காக சாத்தான்குளம் தந்தை-மகன் உடல்: கனிமொழி, ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி

webteam

சாத்தான்குளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தந்தை-மகன் உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த தந்தையும், மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோரின் உடல், அரசரடி தெருவில் அவர்களின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர்களது உடலுக்கு திமுக எம்பி கனிமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவதற்காக சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கூடினர்.

முன்னதாக, கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்கத்தை மீறி கடையை திறந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்த உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.