அரசியல் ஆலோசனைகளும், தேர்தலில் வெற்றி பெற வியூகங்களையும் வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தந்தை முடித்துக் கொள்ள மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரஷாந்த் கிஷோரின் குழு தமிழகத்தில் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலால் கமல்ஹாசன் தரப்பு அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால் மேற்கொண்டு அந்த நிறுவனத்துடன் இணைந்து அரசியல் வியூகங்களை வகுக்கும் முடிவை கமல்ஹாசன் கைவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனிடையே கள ஆய்வை நடத்துவதற்கு ஐபேக் நிறுவனம் தமிழக மாவட்டங்களுக்கு அனுப்பும் ஆட்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவராக இருப்பதால், அவர்களால் மற்ற மாநிலங்களைப்போல தமிழக மக்கள் மன நிலையை கணிக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனடிப்படையில், ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாகவும் மற்றொரு பேச்சு நிலவுகிறது