டிரெண்டிங்

’’எனக்கு பிடித்தது இட்லி சாம்பார்தான்’’ - கமலா ஹாரிஸ்

’’எனக்கு பிடித்தது இட்லி சாம்பார்தான்’’ - கமலா ஹாரிஸ்

Sinekadhara

அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் கமலா ஹாரிஸ். இவரது அப்பா ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். தாயார் இந்தியாவைச் சேர்ந்தவர். 56 வயதான கமலா ஹாரிஸ்தான் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தப் பெண் ஆவார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒருவர் உங்களுக்குப் பிடித்த இந்திய உணவு எது என்று கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு, தென்னிந்தியா என்றால் இட்லி, சாம்பார். வட இந்தியா என்றால் டிக்கா’’ என்று கூறியுள்ளார்.

வேறொருவர், இந்த பிரச்சார நேரத்தில் மன ஆரோக்யத்தை எவ்வாறு பார்த்துக்கொள்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு, ‘’காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதாகவும், பிறகு குழந்தைகளுடன் பேசிக்கொண்டு சமைப்பது தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். இதுதவிர வேலைவாய்ப்பு, பெண் சுதந்திரம் போன்ற பல கேள்விகளுக்கும் அந்த வீடியோவில் பதிலளித்துள்ளார் ஹாரிஸ்.