டிரெண்டிங்

நான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு

நான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு

Rasus

நான் சினிமா நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‌மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் வீட்டிலிருந்து நடிகர் கமல்ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசனை, அவரது பேரன் சலீம் வரவேற்றார். அதன் பின்னர் அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரக்காயரை சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆசி பெற்றார். கமலுக்கு கலாம் குடும்பத்தினர் சார்பில் அப்துல் கலாம் உருவம் பொறித்த நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரத்தில் பேசிய கமல்ஹாசன் தான் சினிமா நட்சத்திரம் இல்லை என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் சினிமா நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை பொத்தி பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. விளக்கை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்புதான். கூட்டத்தில் வரும்போது சற்று பயந்தேன். யாருக்கும் எதுவும் ஆகுவிடுமோயென்று..? ஆனால் மேடையில் நிற்கும்போது உணர்கிறேன். இனிமேலும் இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென்று. மக்கள் வெள்ளத்தில் நீந்தித்தான் வந்தேன். இன்னும் பல்வேறு இடங்களில் போராடி நீந்த வேண்டி உள்ளது” எனத் தெரிவித்தார்.