டிரெண்டிங்

மதுரையில் தொடங்குகிறது கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டம்!

webteam

கமல்ஹாசன் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் வரும் 21ஆம் தேதி மாலை மதுரையில் நடைபெறுகிறது. 

அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி முதல், தனது அரசியல் பயணமான ‘நாளை நமதே’ பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து அன்று மாலை ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அதில் கொடி, கட்சி பெயர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நிர்வாகிகள் பலரும் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை கமல்ஹாசனிடன் தெரிவித்திருக்கின்றனர். 

இதனால் கமலின் முதல் அரசியல் பொதுக்கூட்டம் 21ஆம் தேதி மாலை மதுரையில் நடைபெறும் எனவும், அதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள அனைத்து கமல் ரசிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களையும் கலந்து கொள்ள வைக்க நற்பணி இயக்கத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மதுரையில் இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.